/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7 லட்சம் மோசடி புகார் தந்தை, மகன் மீது வழக்கு
/
ரூ.7 லட்சம் மோசடி புகார் தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : டிச 25, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 25-
ஈரோடு, கைகாட்டி வலசு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனசேகரன், 44; பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவரது உறவினர்களான குமாரசாமி, அவரது மகன் சிவராமன். இவர்கள், 2022ல் வீடு கட்ட, ஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.
இதற்கு ஈடாக இரண்டு காசோலை தந்தனர். அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என ரும்பியது. இதுபற்றிய புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். குமாரசாமி தரப்பினர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. இருவர் மீதும் மோசடி பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

