தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோபியில் ரூ. 9 கோடியில் ரோடு பணி: செங்கோட்டையன்

கோபியில் ரூ. 9 கோடியில் ரோடு பணி: செங்கோட்டையன்

கோபியில் ரூ. 9 கோடியில் ரோடு பணி: செங்கோட்டையன்


ADDED : டிச 18, 2011 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2011 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபிசெட்டிபாளையம்: ''கோபியில் ஒன்பது கோடி ரூபாய் செலவில் சாலை விரிவுப்படுத்தப்படுகிறது,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அளுக்குளி பஞ்சாயத்தில், 139 பயனாளிகளுக்கு ஆடு வழங்கி, அவர் பேசியதாவது: முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாக்கும் வகையில் செயல்படுகிறார்.

இளம்பெண்கள் கண்ணீரை துடைக்கும் வகையில் அவர்கள் திருமணத்துக்கு நான்கு கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய், பட்டதாரி பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயை, முதல்வர் வழங்கி வருகிறார்.

விலை இல்லாத அரிசி 20 கிலோ, விலை இல்லாத மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், ஆடு, மாடு என அனைத்து திட்டங்களும் படிப்படியாக பகுதி வாரியாக வழங்கப்படுகிறது. முதியோர் உதவித் தொகையாக, 500 ரூபாய் பெறும் நிலை மாறி, 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளார். முதல்வரின் திட்டங்கள் ஏழை மக்களை நாடி வருகிறது. இடமற்றவர்களுக்கு இடம், வீடற்றவர்களுக்கு பசுமை வீடு, சூரிய வெப்பத்தால் மின்சாரம் பெறும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கோபியில் ஆர்ச் டூ ஆர்ச் வரை ஆறு கோடி ரூபாய் மதிப்பிலும், மொடச்சூர் சாலை 3.5 கோடி ரூபாய் செலவிலும் விரிவுபடுத்தப்படுகிறது. தாலுகா அலுவலகம் எதிரே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்கூடம் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முருகன்புதூர் அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் பள்ளி, சாரதா பள்ளி, கெட்டிசேவியூர், கரட்டடிபாளையம், வெள்ளாங்கோவில் ஆகிய பள்ளிகளில், 1,533 விலையில்லாத சைக்கிள்களை வழங்கினார். கோட்டுபுள்ளாம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர் உள்பட, 23 இடங்களில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கான்கிரீட் மற்றும் தார்சாலை அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., ரமணீதரன், நகராட்சி தலைவர் ரேவதிதேவி, யூனியன் தலைவர் சத்தியபாமா, முன்னாள் எம்.பி., காளியப்பன், அளுக்குளி பஞ்சாயத்து தலைவர் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us