ADDED : டிச 19, 2011 03:41 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயத்தில் கேரள வியாபாரிகள் கடைகளை கல்வீசி தாக்கிய ஒன்பது
பேரை போலீஸார் கைது செய்தனர்.கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து,
காங்கேயத்தில், கேரள வியாபாரிகளின் கடைகளை அடைக்குமாறு, ஒரு வாரத்துக்கு
முன் நாம் தமிழர் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.
மூன்று நாட்களுக்கு பின்
கடைகள் திறக்கப்பட்டன.நேற்று முன்தினம் இரவு, கடைகள் மீது கல்வீசியதாக,
ம.தி.மு.க., ஒன்றிய அமைப்பாளர் திருமலைசாமி (34) உள்பட ஒன்பது பேர் கைது
செய்யப்பட்டனர்.
