ADDED : ஆக 02, 2024 01:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 24,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 280 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கேரளா, கர்நாடகா விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வரவில்லை. தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால், 90 சதவீத மாடுகள் விற்பனையாகின.
