/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார இயற்கை ஆர்வலர் வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார இயற்கை ஆர்வலர் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார இயற்கை ஆர்வலர் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார இயற்கை ஆர்வலர் வலியுறுத்தல்
ADDED : ஆக 24, 2024 01:24 AM
ஈரோடு, நீதிமன்ற உத்தரவுப்படி ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, துார்வாரும்படி வழிகாட்ட கோரி, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சண்முகசுந்தரம் கடிதம் அனுப்பினார்.
அவரது கடிதத்தில் கூறியதாவது: தனியார் பங்களிப்புடன், ஈரோடு மாநகராட்சியில் ஓடைகள் துார்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 1950ம் ஆண்டுக்கு முந்தைய வருவாய் துறை ஆவணப்படி, அளந்து, அத்து குறித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பரப்பளவு அதிகமாக இருக்கும் இடங்களில் நீர்தேக்கங்கள் அமைத்தால் வருங்கால சந்ததிக்கு பயன் தரும் என குறிப்பிட்டுள்ளது. தவிர, குடிநீராதாரங்களை காக்கவும், நிலத்தடி நீர் உயரவும் ஏதுவாகுமென நீதிமன்றங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த உத்தரவை மதித்து, ஓடைகளை துார்வாரும் முன் ஓடைகளை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன்பின், துார்வாரும் பணியை துவங்கினால் முழுமையான பலன் கிடைக்கும். இதற்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

