/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அண்ணாதுரை 116வது பிறந்தநாள் கொண்டாட்டம்
/
அண்ணாதுரை 116வது பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2024 03:03 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு பெரியார் வீதியில் உள்ள 'தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில்' முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து மாலை அணிவித்தார். எஸ்.பி., ஜவகர், மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஈரோடு ப.செ.பூங்கா வளாகத்தில் உள்ள அண்ணாதுரை உருவச்சிலைக்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில் எம்.பி., பிரகாஷ் மாலை அணிவித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்து மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை
அணிவித்தனர்.

