/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 96 அடியை எட்டியது
/
பவானிசாகர் நீர்மட்டம் 96 அடியை எட்டியது
ADDED : ஆக 14, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 2,264 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம், 96.06 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 25.7 டி.எம்.சி.,யாக உள்ளது.
அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்-துக்கு, 900 கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

