/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஆக 05, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஆடி 18, ஆடி அமாவாசையை முன்னிட்டு அரசு ஊழியர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரண்டு நாள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர். ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை கொண்டாடிய நிலையில், நேற்று மாலையே தங்கள் பணியிடங்களுக்கு திரும்ப ஆர்வம் காட்டினர்.
பணியிடம், கல்லுாரிகளுக்கு கிளம்பிய தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதலே கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோவை, நாமக்கல், சென்னை, சேலம், பெங்களூர் செல்லும் பஸ்களில் முண்டியடித்து
ஏறினர்.