தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு புத்தக திருவிழா நாளை துவக்கம்

ஈரோடு புத்தக திருவிழா நாளை துவக்கம்

ஈரோடு புத்தக திருவிழா நாளை துவக்கம்


ADDED : ஆக 01, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2024 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு சி.என்.கல்லுாரி வளாகத்தில், அரசு மற்றும் மக்கள் சிந்-தனை பேரவை சார்பில் நாளை புத்தக திருவிழா துவங்குகிறது.

இதுபற்றி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குண-சேகரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், 20வது ஆண்டு ஈரோடு புத்-தக திருவிழா நாளை மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். 250 தமிழ், ஆங்கில புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உட்பட பல நாட்டில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் வருகை புரிகின்றனர். புத்தக வெளியீட்டு அரங்கில், தினமும் குறிப்பிட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்-படும். அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதுக்காக, ஏராளமான அறிவியல் கண்டு

பிடிப்பாளர்களிடம் இருந்து அவர்களது தொகுப்புகள் வருகிறது. அவற்றை, 'பட்நாகர் விருது பெற்ற விஞ்ஞானி' லட்சுமணன் தலைமையிலானோர் தேர்வு செய்து, ஒருவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுடன், விருது வழங்கப்படுகிறது.

புத்தக திருவிழா ஆக. 2 முதல், 13 வரை, 12 நாட்கள் தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும். தினமும் மாலை, 6:00 மணிக்கு மாநில நேர நிகழ்வு துவங்கும். இந்நிகழ்வுகளில் பாரதி கிருஷ்ணகுமார், பட்டிமன்ற பேச்சா-ளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், எழுத்தாளர் பாவா செல்லதுரை, சூழலியலாளர் கோவை சதாசிவம், சாகித்ய அகாடமி விருது பெற்ற தேவிபாரதி, விஞ்ஞானிகள் ராமசாமி, லட்சுமணன், குன்-றக்குடி பொன்னம்பல அடிகளார், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை என பலரும் பேச உள்ளனர். இவ்வாறு கூறினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பொன்னுசாமி, பொரு-ளாளர் அழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us