ADDED : ஆக 02, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், பொள்ளாச்சி அடுத்துள்ள நெகமம்
பகுதியை சேர்ந்தவர் தினகரன், 26. இவர் நேற்று மதியம். 1:00 மணியளவில், பொள்ளாச்சியில் இருந்து ஈச்சர் வாகனத்தில், தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் நோக்கி சென்றார். காங்கேயம் பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் தீ பிடித்தது. இதையறிந்த தினகரன், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்பு துறையினர், தேங்காய் மட்டைகளை அகற்றி, தீயை அணைத்தனர். பெருமளவு தேங்காய் மட்டைகள் எரிந்தாலும், வாகனம்
சேதம் இன்றி தப்பியது.