/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
/
கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 24, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், முதல்போக நன்செய் பாசனத்துக்கு, கடந்த, 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பெருந்துறை அருகே வாய்க்காலில் நீர் கசிவு ஏற்-பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது.
நேற்று முன்தினம் முதல் மீண்டும், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர் திறப்பு, 1,500 கன அடியாக நேற்று அதிகரிக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 846 கன அடி, அணை நீர்மட்டம், 97.53 அடி; நீர் இருப்பு, 26.8 டி.எம்.சி.,யாக இருந்தது.