/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் த.மா.கா., நிர்வாகிகள் கூட்டம்
/
ஈரோட்டில் த.மா.கா., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூலை 04, 2024 08:39 AM
ஈரோடு : ஈரோட்டில், த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில இளைஞரணி தலைவர் யுவ-ராஜா ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.வரும், 14ல் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி, உழவர் சந்தை அருகே நடக்க உள்ள மாநில பொதுக்கூட்டம் குறித்து, மாநில பொதுச் செய-லாளர் விடியல் சேகர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் வரும், 14ல் த.மா.கா., சார்பில் நடக்க உள்ள காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணாமலை, ஓ.பி.எஸ்., அன்புமணி, தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உட்பட தலைவர்கள் பங்கேற்க
உள்ளனர். மாநில அளவில், த.மா.கா., தொண்-டர்கள், ஒரு லட்சம் பேருக்கு மேல் அங்கு கூட திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஆயத்தக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு ஈரோடு
மாவட்டத்தில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் திருச்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
நிர்வாகிகள் சந்திரசேகர், ரபீக், சுரேஷ், அன்புதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.