/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாய்கள் பராமரிப்பு மையம் திறந்து வைத்த எம்.எல்.ஏ.,
/
நாய்கள் பராமரிப்பு மையம் திறந்து வைத்த எம்.எல்.ஏ.,
நாய்கள் பராமரிப்பு மையம் திறந்து வைத்த எம்.எல்.ஏ.,
நாய்கள் பராமரிப்பு மையம் திறந்து வைத்த எம்.எல்.ஏ.,
ADDED : பிப் 15, 2025 05:38 AM
கோபி: கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில், 9.70 லட்சம் ரூபாயில் கட்டி முடித்த, நாய்கள் பராமரிப்பு மையம் மற்றும் இனப்பெ-ருக்க தடுப்பு மையத்தை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய-தாவது:
தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்து, இந்த மையத்தில் பராமரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பண்ணாரி பகுதியில் காட்டுப்பன்றி நடமாட்டத்தால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் துப்பாக்கி அனுமதி பெற்றவர்கள், பயிர்-களை சேதப்படுத்தும், காட்டுப்பன்றிகளை விதிமுறைப்படி சுடலாம் என உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. தேசிய பறவை-யான மயிலின் தொந்தரவு விவசாயிகளுக்கு இருப்பது குறித்து சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம். மயிலின் முட்டையை சேகரித்தால், அதன் எண்ணிக்கை குறையும்.
கோபி நகராட்சியில் சீரான குடிநீர் கிடைக்க, நகராட்சி நிர்-வாகம் வழிவகை செய்ய கோரிக்கை வைக்கிறேன். கோபி பஸ் ஸ்டாண்ட் முதல், எம்.ஜி.ஆர்., சிலை வரை குறுகிய சாலையாக உள்ளது. அதனால் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்-யப்படும். இவ்வாறு கூறினார்.

