ஈரோடு, ஆக. 23-
மொடக்குறிச்சி,
சின்னியம்பாளையம், கண்ணன்காட்டு மேட்டை சேர்ந்தவர் சக்திவேல், 27;
கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ஸ்ரீலதா. தனியார் ருத்துவமனை நர்ஸ்.
திருமணமாகி மூன்றாண்டாகிறது. தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை
உள்ளது.
வேலை இல்லாததால் மனைவியிடம் சக்திவேல் புலம்பி வந்தார்.
இந்நிலையில், 20ம் தேதி மாலை ஸ்ரீலதா வேலைக்கு சென்ற நிலையில், அவரை
தொடர்பு கொண்ட சக்திவேல், 'பாப்பாவை பார்த்து கொள். உனக்கு பாரமாக
இருக்கிறேன்' என்று கூறி மொபைல் போன் இணைப்பை துண்டித்துள்ளார். பணி
முடிந்து ஸ்ரீலதா சென்றபோது வீடு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று
பார்த்த போது படுக்கை அறையில் சக்திவேல் துாக்கில் தொங்கி
கொண்டிருந்தார். அவரை இறக்கி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து
சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது
தெரிந்தது. ஸ்ரீலதா புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார்
விசாரிக்கின்றனர்.

