ADDED : ஜூலை 14, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டமுத்தனுாரை சேர்ந்தவர் சுப்-பிரமணியம், 70; ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் பால் வாங்கி கொண்டு, நேற்று காலை வீட்டுக்கு சென்றார்.
எதிரே வந்த பொலீரோ கார் மோதியதில் படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். சத்தி போலீசார் வழக்குப்பதிந்து, பொலீரோ காரை ஓட்டி வந்த கூடக்கரையை சேர்ந்த சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.