/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 31ல் முதல்வர் பிரசாரம் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
/
வரும் 31ல் முதல்வர் பிரசாரம் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
வரும் 31ல் முதல்வர் பிரசாரம் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
வரும் 31ல் முதல்வர் பிரசாரம் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
ADDED : மார் 29, 2024 01:53 AM
ஈரோடு:தி.மு.க.,
தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ஈரோடு தி.மு.க., வேட்பாளர், நாமக்கல்
கொ.ம.தே.க., வேட்பாளர், கரூர் காங்., வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து,
வரும், 31ல் ஈரோடு சின்னியம்பாளையத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல்வர் வருகையை ஒட்டி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி நேற்று
ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் பிரசாரம் மேற்கொள்ளும் இடமான
சின்னியம்பாளையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வில்
ஈடுபட்டார். மாவட்டத்தில் முதல்வர் வந்து செல்லும் வழித்தடங்கள்
குறித்து வரைபடம் தயாரிக்கப்பட்டு, போலீசாரை பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்துவது குறித்து, எஸ்.பி., ஜவகருடன் ஆலோசனை செய்தார்.
ஈரோடு
மாநகரில் மார்க்கெட் அல்லது வாக்கிங் மைதானத்துக்கு முதல்வர் செல்ல
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல்
பாதுகாப்பு பணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.