/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மினி வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி
/
மினி வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி
ADDED : மே 08, 2024 02:34 AM
தாராபுரம்:மூலனுார் அருகே கோவிலுக்கு வேனில் வந்த பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல்
மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்த, 20 பேர், ஒரு மினி வேனில்,
மூலனுார் அருகேயுள்ள மலையாள தன்னாசி கருப்பசாமி கோவிலுக்கு நேற்று
சென்றனர். மார்க்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், 29, வேனை
ஓட்டினார். மூலனுாரை அடுத்த துலுக்கவலசு பிரிவு அருகே, பின்பக்க டயர்
பஞ்சரானதால், சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மார்க்கம்பட்டியை
சேர்ந்த பழனி மனைவி பொட்டியம்மாள், 55, சம்பவ இடத்தில் பலியானார்.
மார்க்கம்பட்டி
சுப்புலட்சுமி, 56, நாகரத்தினம்,50, மணிமேகலை, 35, சுப்பிரமணி,
60, உள்பட 15க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயமடைந்தனர். அனைவரும்
மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.

