ADDED : ஆக 02, 2024 02:03 AM
திருப்பூர், ஆடி பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து திருச்செந்துார், ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.
நாளை ஆடி பெருக்கு, நாளை மறுதினம் ஆடி அமாவாசை. இரு தினங்களிலும், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர் வசதிக்காக காங்கயம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, பத்து பஸ்கள் கொடுமுடிக்கு இயக்கப்படும்.
திருப்பூரில் ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படும். பயணி ஒருவருக்கு ராமேஸ்வரம் கட்டணம், 280 ரூபாய், திருச்செந்துார் கட்டணம், 295 ரூபாய். வழக்கமாக இயங்கும் பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு பஸ்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படும்.
முன்கூட்டியே டிக்கெட் பெற்று, இருக்கை உறுதி செய்ய விரும்புபவர்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள முன்பதிவு மையத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், என, திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.