/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்
/
குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்
ADDED : ஆக 10, 2024 07:42 AM
பவானி: குருநாத சுவாமியின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, பூசாரிகள் பலவாறு யோசித்தனர். கோவிலின் சுற்று பிரகார நடுப்-பகுதியில், குலுக்கை என்னும் பெட்டகம் ஒன்றை உருவாக்கினர். இதன் அளவு, 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயர-மாகும். இதில் சுரங்கப்பாதை அமைத்து பூஜை பொருட்களை வைத்து வந்தனர்.
ஆகம விதிப்படி, ஒரு சந்தி விரதம் இருந்து பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் யாரேனும் பாதுகாப்பு பெட்ட-கத்தில் நுழைய முயற்சித்தால், கொடிய விஷப்பாம்பால் கடி-யுண்டு இறப்பர். இன்றும் இந்நிகழ்ச்சி நடந்தேறி வருவதாக கூறப்படுகிறது.
கோவிலை சுற்றியுள்ள வட்டார பொதுமக்கள் தங்கள் தோட்-டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் தங்களை ஒன்றும் செய்யக்கூடாது என வேண்டுதலிட்டு, குலுக்-கையை பாதுகாத்து வரும் புற்றுக்கு பூக்கள் போட்டு வணங்கி வருகின்றனர்.

