/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஜாதி ஆணவ படுகொலையை கண்டித்தும், இதை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றக்கோரியும், தமிழ் புலிகள் கட்சி-யினர் சார்பில், சூரம்பட்டி நால் ரோடு அருகே நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்-கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் இள-வேனில், தென்மண்டல செயலாளர் திருவளவன் பங்கேற்றர்.
மதுரை, கள்ளிக்குடியில் அழகேந்திரன் என்ற இளைஞர் மாற்று சமூக பெண்ணை காதலித்ததால், தலையை துண்டித்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஜாதி மறுப்பு திரு-மணம் செய்து வைத்ததால் நெல்லையில் மா.கம்யூ.,
கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர்.