நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி : பவானி அருகே சேவாக்கவுண்டனுார் காசிலிங்க-புரத்தில், லவ் பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான ஆண்கள் கபாடி போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
நாக்---அவுட் முறையில் நடந்த போட்டியில், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், கோவை உள்-பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 107 அணிகள் பங்கேற்றன. இரண்டாவது நாளாக நேற்றும் போட்டி நடந்தது. முதலிடம் பிடித்த அணிக்கு, 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த அணிக்கு, 7,௦௦௦ ரூபாய், மூன்றாடம் பிடித்த அணிக்கு, 5,௦௦௦ ரூபாய், நான்காமிடம் பிடித்த அணிக்கு, 3,௦௦௦ ரூபாயுடன் சுழற்கோப்பை வழங்-கப்பட்டது.