/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்
/
வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்
ADDED : ஜூலை 02, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் -ஏ திரவம் வழங்குதல் மற்றும் வயிற்று போக்கு தடுப்பு முகாம், நேற்று தொடங்கியது.
வரும், 31ம் தேதி வரை புதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் நடக்கிறது. அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனை, சுகாதார மையங்களில் நடக்கிறது. முகாமில், 5 வயதுக்கு உட்பட்ட, 1.28 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.