ADDED : ஆக 07, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அறச்சலுாரை சேர்ந்தவர் சண்முகம், 67, கட்டட தொழிலாளி. சில்லாங்காட்டுபுதுாரில் எஸ்.எஸ்.நகரில் இவருக்கு சொந்தமான வீட்டில், ஒரு பெண் வாடகைக்கு குடியிருக்கிறார். இந்த வீட்டருகே கான்கிரீட் பிரமீடு போல் அமைத்து, சண்முகம் தியானம் செய்து வருகிறார்.
கடந்த, 4ம் தேதி மாலை தியானம் செய்ய கிளம்பினார். அங்கிருந்து இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டுக்கு வரவில்லை. மனைவி தேவி அவரை தேடியபோது, வெள்ளியங்கிரிபுதுாரில் சண்முகம் ஓட்டிச் சென்ற பிளாட்டினா பைக் கிடந்தது. இந்நிலையில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு, அறச்சலுார் போலீசில் புகார் செய்துள்ளார்.