ADDED : பிப் 27, 2024 02:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோட்டில் தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உறுதி செய்து, சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
