ADDED : மார் 19, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
ஈரோடு:பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகி பிரபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ், மண்டல பொதுச் செயலாளர் முருகேசன் கோரிக்கை குறித்து பேசினர்.
ஈ.எஸ்.ஐ., பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பை, 15,000 ரூபாயில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஈ.எஸ்.ஐ., பென்ஷன் தொகை, 1,000 ரூபாயை, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.