நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழவர் பெருவிழா
அந்தியூ:அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கோபி வேளாண் அறிவியல் நிலையம், கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், உழவர் பெருவிழா நேற்று நடந்தது. பருத்தி உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பருத்தியை நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்திடல், தொழில்நுட்பங்களை செயல்படுத்தல் குறித்து, முதுநிலை விஞ்ஞானி அழகேசன், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப விஞ்ஞானி சீனிவாசன் விளக்கினர். அந்தியூர் விற்பனைக்கூட அலுவலர் உட்பட அந்தியூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.