நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., போராட்டம்
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில், மாவட்ட தலைவர் புனிதம் அய்யப்பன் தலைமையில், முதல்வர் சாராய கடை, போதையின் பாதையில் செல்லாதீர் அப்பா என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் டாஸ்மாக் கடையில் ஒட்டும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஈரோடு பஸ் ஸ்டாண்ட், சூரம்பட்டி, ரயில்வே ஸ்டேஷன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை போர்டில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.