sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செய்தி துளிகள்..

செய்தி துளிகள்..

செய்தி துளிகள்..


ADDED : ஜூலை 27, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு



* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 6,126 மூட்டைகளில், ௨.௯௦ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 21௫ ரூபாய் முதல் 247.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 2௫ ரூபாய் முதல் 238.60 ரூபாய் வரை, ௬.௯௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டிக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை, 2,600 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,400 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,800 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 250 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,440 முதல், 1,470 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 39,673 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 55.39 முதல், 61.29 ரூபாய்; கசங்கல் தேங்காய், 62.49 முதல், 69.86 ரூபாய் வரை, 15,746 கிலோ தேங்காய், 10.௪௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 120 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் குண்டு உளுந்து மற்றும் பச்சைபயிர், தலா 110 ரூபாய்க்கும் விற்பனையானது. பாசிப்பருப்பு, 120, கொள்ளு, 60, கடலைப்பருப்பு, 100, கடுகு, 110, சீரகம், 360, மல்லி, 140, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 120, கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 110, புளி, 160 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும், வரமிளகாய், 160 முதல், 220 ரூபாய்க்கும், பூண்டு, 100 ரூபாய் முதல், 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 63 ரூபாய், நேந்திரன், 28 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாழை தார், 1,000 ரூபாய், தேன்வாழை, 740, பூவன், 710, ரஸ்த்தாளி, 680, மொந்தன், 360, ரொபஸ்டா, 560, பச்சைநாடான், 420 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,640 வாழைத்தார்களும், 9.37 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 18 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 23 ஆயிரத்து 630 தேங்காய்களும், 7.15 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 85 விவசாயிகள், 18,034 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 82.65 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 56.60 ரூபாய்க்கும் ஏலம் போனது. 7.3 டன் தேங்காய், 4.௭௪ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 1,640 கிலோ பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 238.30 ரூபாய், குறைந்தபட்சம், 134.10 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us