ADDED : ஜூலை 29, 2025 01:18 AM
ஈரோடு, ஈரோடு சம்பத் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன், ஈரோடு அட்வகேட்ஸ் பெடரேஷன், பார் அசோசியேஷன் வக்கீல்கள் இணைந்து நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் வாஞ்சிநாதன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதித்து வழக்கை கண்டித்தும், பத்மநாமபுரம் நீதிமன்ற வளாகத்தின் முன் அறப்போராட்டம் நடத்திய வக்கீல்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஈரோடு அட்வகேட்ஸ் பெடரேஷன் தலைவர் கோகுல், பார் அசோசியேஷன் தலைவர் சரத் சந்தர் தலைமையில், 40 வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
* கோபி வக்கீல் சங்கம் சார்பில், கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், தலைவர் தனக்கோட்டிராம் தலைமையில் துணை தலைவர் காளத்திநாதன், மூத்த வக்கீல்கள் ஜெகதீஸ்வரன், சிவராஜ், கந்தசாமி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* பெருந்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.