நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் செல்லும் வழியில், ஆறாவது மைல் பகுதியில் இரண்டு சிறுத்தை நடுரோட்டில் விளையாடி கொண்டிருந்தன. அப்போது ஒரு வாகனம் சென்றது.
இதை தொடர்ந்து இரு சிறுத்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றன. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் எடுத்த போட்டோ பரவி வருகிறது. கடம்பூர் செல்லும் வழியில் யானையை தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர்.