ADDED : செப் 07, 2025 12:56 AM
ஈரோடு :கோபி, கள்ளிப்பட்டி பாசன விவசாயிகள் சங்க அலுவலக வளாகத்தில், வேளாண் அறிவியல் நிலையம், மைரடா, கோவை காருண்யா பல்கலை வேளாண் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது. உதவி பேராசிரியர்கள் ஆஷா மோனிகா, தீபக் தாஸ், சாமுண்டேஸ்வரி, உமாகவுரி முன்னிலை வகித்து பேசினர். மைரடா பொறுப்பாளர் பிரேமலதா தலைமை வகித்தார்.
மகரந்த சேர்க்கை, தேனீ வளர்ப்பு, வாழை நார் பொருட்கள் தயாரித்தல், நீர் பாசனம், மண் மாதிரிக்கான நீர் தர பரிசோதனை, கரும்பு மொட்டு சில்லு நடவு, பயனுள்ள நுண்ணுயிரி போன்றவை குறித்து விளக்கமளித்து, வேளாண் அதிகாரிகள், விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
கரும்பில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் டிரைக்கோகிராமா அட்டை, பொறிகள் பயன்பாடு, நோய் கண்டறிதல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.