நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் மதியம், 3:50 முதல், மாலை, 4:15 மணி வரை, ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேநேரம் வெயில் தாக்கமும் இருந்தது. தொடர்ந்து இரவு, 7:45 மணிக்கு ஏற்காடு முழுதும் கனமழை பெய்யத்தொடங்கி, 10:00 மணி வரை கொட்டித்தீர்த்தது. பின் சாரல் மழையாக மாறி பெய்தது.
கெங்கவல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் தெடாவூர், நடுவலுார், கடம்பூர், கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. அதேபோல் இரவு, 9:00 மணிக்கு, வாழப்பாடி, துக்கியாம்பாளையம், முத்தம்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்து, குளிர்ந்த சூழல் நிலவியது.