நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே நேரு நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் தீனதயாளன், 24; கல்லுாரி படிப்பை பாதியில் விட்ட நிலையில் பெற்றோரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.