நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகரை அடுத்த வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் மகள் சுபஸ்ரீ. பி.பி.ஏ., முடித்து விட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தார். தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்த நிலையில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தை குடித்துள்ளார்.
மேல் சிகிக்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சுபஸ்ரீக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத நிலையில் தற்போது வேண்டாம் என்று மறுத்துள்ளார். இதில் தந்தை, மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, பவானிசாகர் போலீசார் தெரிவித்தனர்.