ADDED : ஏப் 25, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு, மாணிக்கம்
பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ, 52; இவரது மனைவி பாக்யா, 39; தம்பதிக்கு, 11 வயதில் மகள் உள்ளார். பாக்யாவை, இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொழிலாளியான ராஜு மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இதனால் சண்டை ஏற்பட்டது. மது குடிப்பதை தொடர்ந்தால், மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுவேன் என்று பாக்யா கூறியுள்ளார். இதனால் வீட்டை விட்டு மாயமாகி விட்டார். பாக்யா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
