ADDED : மே 18, 2026 01:52 AM

சென்னிமலை:சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வரும், 21ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் நேற்று காலை, 8:30 மணிக்கு பால் குடம் ஊர்வலம் நடந்தது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 625 பால் குடங்களை சுமந்த பெண்கள், சென்னிமலை நான்கு ராஜவீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாளை மாலை கும்பம் பாலித்தல், 20ம் தேதி காமாட்சியம்மன் மாவிளக்குடன் திருவீதிகளில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது.21ம் தேதி காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை மேலப்பாளையம் மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்து சேரும். இதை தொடர்ந்து களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு செண்டை மேளம் முழங்க திருக்கோவிலை வந்தடையும்.
