/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 மி., கழுதைப்பால்ரூ.1,200க்கு விற்பனை
/
100 மி., கழுதைப்பால்ரூ.1,200க்கு விற்பனை
ADDED : பிப் 12, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
100 மி., கழுதைப்பால்ரூ.1,200க்கு விற்பனை
அந்தியூர்:சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த முத்து, தனபால், ஆறுமுகம், ஆகியோர், ஊர் ஊராக சென்று, கழுதைப்பால்
விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வகையில் அந்தியூருக்கு, 12 கழுதைகளுடன் நேற்று வந்தனர்.
கழுதைப்பால், 100 மில்லி, 1,200 ரூபாய், 50 மில்லி, 600 ரூபாய்க்கும் விற்றனர். ஒரு சங்கடையில் குழந்தைகளுக்கு ஊற்றி தர, 100 ரூபாய் பெற்றனர். கழுதைப்பால் குடித்தால் குழந்தைகளுக்கு சளி, மஞ்சள் காமாலை, ரத்த சோகை, ஜீரண சக்தி, தோல் சம்பந்தமான வியாதிகள்
குணமாவதாக தெரிவித்தனர்.

