/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 104 டிகிரி வெயிலால் அவஸ்தை
/
ஈரோட்டில் 104 டிகிரி வெயிலால் அவஸ்தை
ADDED : மே 06, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது.
இரண்டு வாரமாக, ௧௦௦ டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது. மாநில அளவில் பல நாட்களில் அதிகபட்ச வெயில் பதிவாகி, அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் மாவட்ட, மாநகர மக்கள் பகலில் பெரும்பாலும் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில், நேற்று, 104 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து, ௧௦௦ டிகிரி வெயிலுக்கு மேல் பதிவாகி வருவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.