ADDED : ஏப் 10, 2025 01:10 AM
வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்
ஈரோடு:ஈரோடு அடுத்த, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் வரும், 14 முதல் ஒவ்வொரு திங்கள்
கிழமை தோறும் மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது.தேசிய வேளாண் சந்தை திட்டமான, இ-நாம் மூலம் மஞ்சள் ஏலம் நடக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது மஞ்சள் மூட்டைகளை தரம், ரகம் வாரியாக பிரித்து, கல், மண், துாசி, இதர பொருட்கள் நீக்கி, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்க வேண்டும். ஏலத்தில் பங்கு பெறும் விவசாயிகள், தங்களது மஞ்சள் மூட்டைகளை, லாட் வாரியாக பரிவர்த்தனை கூடத்தில் பரவலாக கொட்டி காட்சிப்படுத்த வேண்டும். வியாபாரிகள், மஞ்சளை தரம் பார்த்து விலை நிர்ணயிக்கவும், நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பாகும். நல்லகவுண்டன் பாளையம், கன்னிமார்க்கெட்டில் செயல்படும், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டடத்துக்கு, விவசாயிகள் தங்கள் மஞ்சளை கொண்டு வர வேண்டும்.