/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 1.517 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
/
மாவட்டத்தில் 1.517 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
ADDED : ஆக 28, 2024 07:26 AM
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி விழா செப்., ௭ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவை கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு சதுர்த்தி விழாவில், 1,517 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே சிலைகள் வைக்கப்பட்ட இடங்களாகும். புதிதாக எந்த ஒரு இடத்திலும் சிலை வைக்க அனுமதி தரப்படவில்லை. ௭ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்காக, 48 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சிலை மற்றும் ஊர்வல பாதை பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சத்தி, புளியம்பட்டி, தாளவாடி பகுதிகள் ஊர்வலத்தின் போது பதற்றமானவையாக கருதப்படுகிறது. இப்பகுதிகளில் ஊர்வலத்தின் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.