/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்1,835 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்1,835 வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 04, 2025 01:28 AM
போக்குவரத்து விதிமீறல்1,835 வழக்குகள் பதிவு
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் விதிமீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதன்படி மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 932 வழக்கு, ஓட்டுனர் உரிமமின்றி வாகனம் இயக்கியதாக, 29, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 15, வாகன காப்பீடு இல்லாத பிரிவில், 100 வழக்குகள் என, 1,835 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து, 6.77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிய, 29 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைத்தனர்.

