/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.19 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது
/
ரூ.19 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது
ADDED : பிப் 01, 2025 01:09 AM
ரூ.19 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 62; இவருக்கு, சூரம்பட்டி எஸ்.கே.சி., சாலையை சேர்ந்த வர்க்கீஸ் என்ற ராஜா, 64, அறிமுகமானார். கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்களுக்கு மனு எழுதி தரும் பணியை வர்க்கீஸ் செய்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இவர், குடும்பத்தை பிரிந்து ஈரோட்டில் தனியாக வசித்து வந்தார். 'அரசு உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் சத்துணவு பணி, ஆசிரியர், அலுவலக எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளை வாங்கி கொடுத்துள்ளேன். யாராவது அரசு வேலைக்கு முயன்றால், அழைத்து வரலாம்' என்று கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பண்ணன் அவரது மகனுக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருமாறு, 2023ல் ஒன்பது லட்சம் ரூபாய் தந்துள்ளார். ஆனால், வர்க்கீஸால், அரசு வேலை வாங்கி தர முடியவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், கருப்பணன் போல மேலும் 6 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக, 19 லட்சம் ரூபாய் வாங்கி, வர்க்கீஸ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
வர்க்கீசுக்கு உதவியாக அவரது அண்ணனான, விருதுநகர் மாவட்டம் துலுக்கபட்டியில் டுட்டோரியல் கல்லுாரி நடத்தும் பரதராஜன், மற்றொருவர் என மூன்று பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் வர்க்கீஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது அண்ணன் பரதராஜனை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.