ADDED : பிப் 27, 2025 02:15 AM
அ நிறம் | அளவு
ரூ.1.98 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை:பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,016 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 43 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 135.15 ரூபாய், அதிகபட்சமாக, 150.69 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 20.89 ரூபாய், அதிகபட்சமாக, 146.49 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், ஒரு கோடியே, 98 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
