ADDED : ஆக 27, 2024 02:47 AM
அந்தியூர்: அந்தியூர், ஜே.ஜே.நகரை சேர்ந்த லாரி டிரைவர் மாதேவன், 45; இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாரஸ் லாரி சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகரித்துள்ளது. இதனால் லாரியை விற்று விட்டார். இந்த மன-வேதனையில் இருந்த மாதேவன், கெட்டிசமுத்திரம் ஏரிக்க-ரையில் ஒரு மரத்தில் லுங்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
*
அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் குமார், 29; ஒரு வாரத்த்துக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மூவருடன், பெயிண்டிங் வேலைக்காக சென்னை சென்றார். கடந்த, ௨௩ம்
தேதி குமார் மட்டும் திரும்பியுள்ளார். அப்போது முதல் தொடர்ந்து மது
குடித்து வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால், நேற்று முன்-தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு சம்பவங்கள் குறித்து, அந்தியூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
