ஜி.எச்.,ல் 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் திறப்பு
ஜி.எச்.,ல் 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் திறப்பு
ADDED : அக் 27, 2026 05:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவம-னையில், 24 மணி நேரமும் செயல்படும் வகை யில் கேட்டீன் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவம-னைக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களுடன் உறவினர்கள் வந்து செல்கின்றனர். இதில்லாமல் டாக்டர், செவிலியர், பிற பணியாளர், துாய்மை பணியாளர், காவ-லர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பணி செய்-கின்றனர்.
நோயாளிகள் உட்பட இங்கு பணி செய்வோர் வரை, டீ, காபி, சிற்றுண்டி, மதிய உணவு, சுடு-தண்ணீர் தேவைக்கும் கூட வெளியே சென்று வந்தனர். இதனால், 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் திறக்க வலியுறுத்தினர்.இந்நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் நேற்று திறக்கப்பட்டது. இங்கு டீ, காபி, பால், காலையில் இட்லி, தோசை, பொங்கல், மதி யம் சாம்பார் சாதம், தயிர் சாதம், சாப்பாடு, இரவில் தோசை, பரோட்டா, நுாடுல்ஸ், பாஸ்ட்புட் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
