ADDED : மார் 19, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உ.தேடி, உ.ஊரில்'26க்கு மாற்றம்
ஈரோடு:தாளவாடியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணத்தால் மாற்றம் செய்யப்பட்டு வரும், 26ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை தாளவாடி தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து, கலெக்டர் குறைகள் கேட்கிறார். அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.