/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
ஈரோடு மாவட்டத்தில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : ஆக 04, 2024 01:31 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், 59 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ௨௯ பேர் இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு தாலுகா நவநீதகிருஷ்ணன்- கோவை மதுக்கரை; சூரம்பட்டி வைரம் -கோவை கோவில்பாளையம்; பவானி தாமோதரன் கோவை ஆனைமலை சர்க்கிள்; பு.புளியம்பட்டி சரவணன்- ஈரோடு தாலுகா; கோபி மதுவிலக்கு கலையரசி- திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு; கடத்துார் துரைபாண்டி நீலகிரி சேரம்பாடிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
தாளவாடி சர்க்கிள் செல்வன் கோவை அன்னுார்; சென்னிமலை துரைராஜ்- நீலகிரி நடுவட்டம் சர்க்கிள்; ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு ஜோதிமணி நீலகிரி ஊட்டி மதுவிலக்கு பிரிவு; ஈரோடு மதுவிலக்கு சரஸ்வதி -சத்தி அனைத்து மகளிர்; சத்தி போக்குவரத்து திருநாவுக்கரசு- பல்லடம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு முருகன் -கோபி போக்குவரத்து; ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு பிரேமா- திருப்பூர்; ஈரோடு தெற்கு ராமராஜன் -சேலம் சரகத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் சைபர் கிரைம் நாகமணி- கோபி அனைத்து மகளிர் போலீஸ்; தாராபுரம் சட்டம் ஒழுங்கு ரவி சித்தோடு; நீலகிரி கோத்தகிரி சர்க்கிள் ஜெயமுருகன்- அம்மாபேட்டை; நீலகிரி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் கோமதி பவானி அனைத்து மகளிர்; திருப்பூர் உடுமலை மகளிர் கவிதா -கோபி மதுவிலக்கு; கோவை நெகமம் ரவி- நம்பியூர்; நீலகிரி சேரம்பாடி சுப்புரத்தினம் பு.புளியம்பட்டி; கோவை ரத்தினபுரி சிவக்குமார் சென்னிமலைக்கு மாற்றமாகியுள்ளனர்.
திருப்பூர் பல்லடம் முருகையன் பவானி சர்க்கிள்; திருப்பூர் மத்திய கிரைம் சிவகாமி ராணி ஈரோடு மதுவிலக்கு பிரிவு; சேலம் கொளத்துார் தேவராஜ்- பங்களாபுதுார்; திருப்பூர் குண்டடம் வேல்முருகன் -தாளவாடி; கோவை போத்தனுார் அனைத்து மகளிர் கோமதி ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு; திருப்பூர் பல்லடம் போக்குவரத்து குருசாமி சத்தியமங்கலம் போக்குவரத்து; கிருஷ்ணகிரி ரமேஷ்- ஈரோடு தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.