ADDED : பிப் 26, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
4 வார்டுகளில் 'மாஸ் கிளீனிங்'
ஈரோடு,:ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு வார்டில், மாஸ் கிளீனிங் நேற்று நடந்தது. இதன்படி, 24வது வார்டு, 36வது வார்டு, 30வது வார்டு, 52வது வார்டுக்குகளில் பணி நடந்தது. இதில் பிரதான சாலைகளில் தேங்கிய மண் அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், வாய்க்கால் துார்வாருதல் போன்ற பல்வேறு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 180க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், 10 டன் அளவுக்கு கழிவு அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.