sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரும் 5ல் மூன்று இடங்களில்மின் நுகர்வோருக்கான முகாம்

/

வரும் 5ல் மூன்று இடங்களில்மின் நுகர்வோருக்கான முகாம்

வரும் 5ல் மூன்று இடங்களில்மின் நுகர்வோருக்கான முகாம்

வரும் 5ல் மூன்று இடங்களில்மின் நுகர்வோருக்கான முகாம்


ADDED : ஏப் 03, 2025 01:47 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் 5ல் மூன்று இடங்களில்மின் நுகர்வோருக்கான முகாம்

ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பில் மின் கட்டண குறைபாடு, பழுதடைந்த மின் அளவி மாற்றம், குறைந்த மின்னழுத்தம், பழுதான மின் கம்பம் மாற்றம் தொடர்பான மனுக்கள் பெற சிறப்பு முகாம் வரும், 5 காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை அனைத்து செயற்பொறியாளர் (இயக்குதலும் பேணுதலும்) அலுவலகங்களில் நடக்க உள்ளது.

* 'செயற்பொறியாளர் (நகரியம், பேணுதலும்), 948-ஈ.வி.என்., சாலை, கோட்ட அலுவலகம், ஈரோடு' என்ற முகவரியில் நடக்கும் முகாமில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி மின் நுகர்வோர் பங்கேற்கலாம்.

* 'செயற்பொறியாளர் (வினியோகம், தெற்கு), 948-ஈ.வி.என்., சாலை, கோட்ட அலுவலகம், ஈரோடு' என்ற முகவரியில் நடக்கும் முகாமில், சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கந்தசாமிபாளையம், கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பாரப்பு பகுதி மின் நுகர்வோர்கள் பங்கேற்கலாம்.

* 'செயற்பொறியாளர், பெருந்துறை கோட்ட அலுவலகம், 33/11 கி.வோ.துணை மின் நிலைய வளாகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம், பெருந்துறை' என்ற முகவரியில் நடக்கும் முகாமில், பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மின் நுகர்வோர்கள் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us