sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

7 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்

/

7 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்

7 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்

7 பேரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 26, 2024 02:26 AM

Google News

ADDED : மார் 26, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு பகுதியில் ஏழு பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர், ஏழு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு பகுதியில் நேற்று, மாணிக்கம்பாளையம், வ.உ.சி., பூங்கா, பி.பி.அக்ரஹாரம், சித்தோடு 4 ரோடு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, காரில் வந்த மாதேஸ்வரன் என்பவரிடம், 1 லட்சம் ரூபாய்; மனீஷ் என்பவரிடம், 2.50 லட்சம் ரூபாய்; அருண்குமார் என்பவரிடம், 2.25 லட்சம் ரூபாய்; காமேஷ்குமார், சுரேஷ்குமார், மாதேஷ் ஆகியோரிடம், 81,400 ரூபாய்; தமிழரசன் என்பவரிடம், 53,000 ரூபாய் என, 7 லட்சத்து, 9,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட அளவில் இதுவரை, ஈரோடு கிழக்கில், 43.71 லட்சம் ரூபாய்; ஈரோடு மேற்கில், 44.37 லட்சம் ரூபாய்; மொடக்குறிச்சியில், 5.56 லட்சம் ரூபாய்; பெருந்துறையில், 17.40 லட்சம் ரூபாய்; பவானியில், 7.62 லட்சம் ரூபாய்; அந்தியூரில், 4.20 லட்சம் ரூபாய்; கோபியில், 8.88 லட்சம் ரூபாய்; பவானிசாகரில், 49.06 லட்சம் ரூபாய் என, ஒரு கோடியே, 84 லட்சத்து, 16,740 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை சமர்பித்ததால், 77 லட்சத்து, 95,915 ரூபாயை விடுவித்தனர். தற்போது, 1 கோடியே ஆறு லட்சத்து, 20,825 ரூபாய் கருவூலத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us